பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் உலகமெங்கும் நேற்று வெளியானது. தமிழகத்தின் முன்னணி ஹீரோவான விஜய்யின் படம் என்பதால், மிகுந்த எதிபார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவந்த ‘பைரவா’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுவாகவே விஜய், அஜித் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில், தமிழகத்தில் `பைரவா’ படத்தின் முதல்நாள் வசூல் சுமார் 20 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் விஜய் படத்தின் முதல் நாள் வசூலில் `பைரவா’ சாதனை படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் ரிலீசாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.