ஓயாத இருமலால் அவதியா? இதோ சூப்பரான வீட்டு மருந்து!

தற்போது மாறி வரும் பருவ நிலையானது பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும் இப்போது இருக்கும் குளிர்காலம் ஓயாத இருமல், ஜலதோஷம் என வயது வித்தியாசம் இல்லாமல் படாய்ப்படுத்துகிறது.

என்னதான் பல மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் விரைவில் இது குணமடையாது. இதற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கஷாயம் கைகொடுக்கும். இதனை 3 வேளைக்கும் அருந்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

துளசி- ஒரு கைப்பிடி

வெற்றிலை – 2

புதினா – 1 கைப்பிடி

கற்பூரவல்லி – 3

செய்முறை
  • சுக்கு, மிளகு, திப்பிலி , வால் மிளகு, அதிமதுரம், சித்தரத்தை போன்றவற்றை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். சம அளவில் தனித்தனியாக வாங்கியும் ஒன்றாக கலந்து கொள்ளலாம்.
  • முதலில் எல்லா மருந்து இலைகளையும் நன்றாக கழுவி பொடியாக ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.
  • அவற்றுடன் மேலே சொன்ன மூலிகை பொடியையும் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இதனை 3 வேளைக்கு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை மாத்திரை வடிவிலும் சாப்பிடலாம்.