குவைத் நாட்டில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காகவே இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத் நாட்டில் சல்மியா எனும் இடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பிலும் இவருக்கு தொடர்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தின்போது குறித்த நபரும் மற்றுமொரு யுவதியும் காயமடைந்திருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து என அதை மூடிமறைக்க முயற்சித்துள்ளார்.
இந்த நிலையிலேயே குறித்த சம்பவம் விபத்தல்ல கொலை என்று குவைத் நீதிமன்றம் உத்தரவிட்டு குறித்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.