இன்றைய ராசி பலன்கள் 14.01.2017

  • மேஷம்

    மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். வெற்றி பெறும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தின ருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தோல்வி மனப்பான்மை யிலிருந்து விடுபடுவீர்கள். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

  • கடகம்

    கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • கன்னி

    கன்னி: நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய சொந்த பந்தங்கள் தேடிவரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு கணிசமாக உயரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.

  • துலாம்

    துலாம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

  • தனுசு

    தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத கவலை வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.