விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இருளுக்கு மீண்டும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமை பாதுகாப்போம்…
விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையை வழங்குகின்ற சூரிய பகவான் மற்றும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்துகளால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்து பக்தர்களுக்கு தைப்பொங்கல் தினத்தின் பின்னரே புதுவருடம் ஆரம்பமாகின்றது. புதிய வருட ஆரம்பத்தை தொடர்ந்து புதிய எதிர்பார்ப்பு, நல்ல விடயங்களை மேற்கொள்வதற்கு இலங்கை இந்த பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம்.
2009ஆம் ஆண்டின் பின்னர் யுத்தத்தில் காயமடைந்த தெற்கு மற்றும் வடக்கு மக்களின் மனங்களை இணைத்து உண்மையான நல்லிணக்கம் நாட்டினுள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
குறுகிய பிளவுகளை கைவிட்டு நாங்கள் இலங்கையர்கள் என இணைந்திருப்போம். ஆனால் “மாற்றம்” என்ற பெயரில் இன்று நாட்டினுள் போலி நல்லிணக்கமும் அதன் ஊடாக மக்களுக்கு இடையில் எதிரியான நட்பும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இந்த அனைத்து விடயங்களின் ஆழத்தை புரிந்துக் கொள்ளும் புதிய வருடமாக இது காணப்படும். அதில் மீண்டும் இருண்ட சூழலுக்கு இடமளிக்காமல் அனைவரும் நட்புடன் தேசிய நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு இந்த நல்ல நாளில் இந்து பக்தர்கள் செயற்பட வேண்டும் என விமல் வீரவன்ச தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.