ஜெயலலிதா தலைமை ரஜினி ஸ்டைல்: சசிகலா தலைமை கமல் ஸ்டைலாம்… நாஞ்சில் சம்பத்

அதிமுகவில் ஜெயலலிதா தலைமை என்பது ரஜினி ஸ்டைல்; சசிகலா தலைமை என்பது கமல் ஸ்டைல் என குறிப்பிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

சசிகலா யார் என்றே தெரியாது- அரசியலுக்கே முழுக்கு போடுகிறேன் என திடீரென அறிவித்தார் நாஞ்சில் சம்பத். அத்துடன் ஜெயலலிதா தமக்கு கொடுத்த இன்னோவா காரையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து பரபரப்பை ஏற்படுத்திய்னார் நாஞ்சில் சம்பத்.

ஆனால் அடுத்த வாரமே சசிகலாவை நேரில் சந்தித்து அவரது தலைமையை ஏற்பதாக அறிவித்தார் நாஞ்சில் சம்பத். இதனால் அவர் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானார்.

தற்போது காவேரி டிவி சேனலின் கேள்வி களம் பகுதிக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் தலைமை ரஜினி ஸ்டைல்; சசிகலா தலைமை என்பது கமல் ஸ்டைல் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

அத்துடன் தம் மீதான சமூக வலைதளங்களின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்… நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் பதிலளித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.

இப்பேட்டி நாளை அல்லது நாளை மறுநாள் காவேரி டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.