இங்கிலாந்தில் டைரோன் பகுதியில் உள்ள பைவ் மைல்டவுன் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷ்லே பாரெல். விவசாயி. இவர் அன்னா லூயிஸ் மார்ட்டின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர், தனது காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அந்த விருப்பத்தை மிக நூதன முறையில் வெளிப்படுத்தினார்.
அதாவது கிறிஸ்துமஸ் அன்று தான் வளர்க்கும் ஒரு பசுவின் உடலில் ‘என்னை திருமணம் செய்து கொள்’ (‘மேரி மீ’) என வாசகத்தை எழுதி அன்னா லூயிஸ் வசிக்கும் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அங்கு வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.