தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது: ரஜினிகாந்த் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில், ரஜினி, விஜய் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து ரஜினி கூறுகையில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.

பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.