அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க சென்ற சந்தர்ப்பத்தில் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார் என தகவல் கிடைத்தவுடன் நாமல் ராஜபக்ச, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னால் வருகைத் தந்திருந்தனர்.
இதன் போது தம்பி நீ ஆயத்தமாக இரு அடுத்தது நீயா என்று தெரியவில்லை என ஜோன்ஸ்டன், பிரசன்னவை பார்த்து குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான் தயாராக தான் உள்ளேன் என பிரசன்ன பதிலளித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.