மஹிந்தவுக்கு கிடைத்த அதிஷ்டம்!

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் 30(2) சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் பதவி காலம் 5 வருடம் என்பதனால், அந்த காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாமல் 2 மாதங்களுக்கு அதிகரிக்காமல் வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

அதற்கமைய 2019ம் நடுப் பகுதியில், அதாவது டிசம்பர் மாதம் 8ம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் 2019ம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரம் வழங்குவதற்கு அவசியமான முறையில் புதிய அரசியலமைப்பு தயாரித்து, ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் மக்களின் விருப்பத்த அறிந்து கொள்ளப்படவுள்ளது.

அதற்கு பின்னர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் அவசியத்திற்கமைய திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தற்போது வரையில் சட்ட அறிஞர்களினால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்படி இல்லை என்றால் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

31(2) அரசியலமைப்பிற்கமைய இரண்டு முறை மக்களின் வாக்குகளில் ஜனாதிபதியாக பதவி வகித்தமையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது.

எனினும் மஹிந்த ராஜபக்சவினால் பெயரிடப்படுகின்ற பிரதிநிதியினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு எவ்வித தடையும் இல்லை. அத்துடன் அவ்வாறு தெரிவாகும் ஜனாதிபதி அப்போது உள்ள உறுப்பினருக்கு பிரதமர் பதவி வழங்க முடியும்.

அதற்கமைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுகின்ற நிலையில் அவரினால் அமைச்சரவையில் பிரதமராக நியமிக்கப்பட்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு புதிய நாடாளுமன்ற நிறைவேற்று அதிகாரத்தை வழங்கி மஹிந்த ராஜபக்ச பிரதமராக புதிய அரசியலமைப்பினுள் நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.