மின்சார நாற்காலியை சில தரப்பினர் மறந்து விட்டார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
மனித உரிமைப் பிரச்சினைகள், மின்சார நாற்காலி, சர்வதேச நீதிமன்றம் பற்றி பிரச்சாரம் செய்தவர்களுக்கு தற்போது அவ்வாறான ஒன்று இருந்தது என்பதே நினைவில் இல்லை.
நேற்று முன்தினம் யோசனையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச நீதவான்களை ஈடுபடுத்த வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கிடையாது.
உள்நாட்டு நீதவான்களே இந்த விசாரணைகளை மேற்கொள்வார்கள்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் ஊடாக பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி நாட்டின் நன்மதிப்பே அதிகரித்துள்ளது.
அண்மையில் ஹம்பாந்தோட்டையில் பாரிய போராட்டமொன்று நடத்தப்பட்டது. மக்கள் ஆத்திரமடைந்தனர்.
அரசாங்கம் ஒரே நிலைப்பாட்டில் இல்லாத காரணத்தினால் எதிர்த்தரப்பினருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஒரே நிலைப்பாட்டில் இல்லாமை அரசாங்கத்தின் பலவீனமாகவே காணப்படுகின்றது என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.