இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் இன்று தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
யாழ்.நல்லூர் ஆலயத்தில் பொங்கள் தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் பூஜை வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காக தமிழர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டவர்களும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டவர் வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் தினத்தை கொண்டாடியுள்ளனர்.
தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், மொழிகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காகவே வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு வழிபாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.