கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றுக்கான பாடசாலை மாணவர்களை சேர்ப்பதற்கு சில பெற்றோர்களிடம் தலா 20 லட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பின் பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளின் போது சில பெற்றோர் 20 லட்சம் ரூபாவிற்கும் மேல் தரம் ஒன்றுக்காக தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு செலவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.கொழும்பு றோயல் கல்லூரி உள்ளிட்ட 25 தேசிய பாடசாலைகளில் சட்டவிரோதமான முறையில் பெற்றோரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அண்மையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியிருந்தார்.
சட்டவிரோதமான முறையில் பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதற்கு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அவ்வாறானவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
றோயல் கல்லூரி தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியனதன் பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள ஏனைய பாடசாலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.