அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் நிச்சயமற்றத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அரசியல் அமைப்புப் பேரவையை கூட்டுவதற்கான திகதிகளை நிர்ணயப்பதிலும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
திகதிகளை நிர்ணயப்பதிலும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்து நாடாளுமன்றிற்கு அதிகாரத்தை ஒப்படைத்தல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட யோசனைகளை உள்ளடக்கி புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கோருகின்றன.
எனினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய யோசனைகள் தவிர்ந்த ஏனைய யோசனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
கடந்த 9, 10 மற்றும் 11ம் திகதிகளில் நாடாளுமன்றில் அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத் தொடர் நடத்தப்படவிருந்தது. எனினும், சில காரணிகளினால் இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை.
தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் காரணமாக அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என ஞாயிறு பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.