புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் தலைமையிலான பொதுஜனமுன்னணி கட்சிக்குள் பிளவுகள் உருவாகியுள்ளன.
மாவட்ட மட்டத்தில் கட்சியின் காரியாலயங்களை அமைக்கும் விடயத்திலேயே அந்தமுறுகல்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் இந்த முறுகல் முற்றியுள்ளது.
கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 27ம் திகதியன்று நுகேகொடையில்நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் மஹிந்தவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் பொதுஜனமுன்னணியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.