2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வறுமையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 2500 ரூபாவை மீண்டும் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூர்தி கொடுப்பனவை பெறுவோருக்கு இந்த அடிப்படையில் 1.4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டன. எனினும் இது கடனா? என்பது குறித்து எவ்வித தகவலும் அப்போது வெளியிடப்படவில்லை.
இதன்காரணமாக இது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பாகவே குறித்த நிதியை பெற்றோர் எண்ணியிருந்தனர்.
எனினும் இந்த நிதி கடனாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை தவணைக் கொடுப்பனவுகளாக திருப்பிச் செலுத்துமாறும் சமூர்த்தி அதிகாரிகள் பயனாளிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சில இடங்களில் பணத்தை முழுமையாக செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.