வடக்கு, கிழக்கின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் கடந்த வாரம் இது தொடர்பிலான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீதிகளுக்கு அருகாமையில் மற்றும் ஏனைய இடங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை பிரதேசத்தில் சில புத்தர் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து புத்தர் சிலைகளுக்கும் விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.