சசிகலா நடராஜனை அதிமுக பொது செயலாளராக நியமித்ததை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது என சசிகலா புஷ்பா அந்த ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சசிகலா புஷ்பா கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை அவர் கூடவே இருந்து கடைசி வரை கவனித்து கொண்டதாக கூறும் சசிகலா தான் விளக்க வேண்டும்.
ஜெயலலிதாவாலேயே துரோகி என பட்டம் சூட்டப்பட்டு போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட சசிகலா தான் இன்று ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு பொதுக் குழுவால் அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில், கட்சியின் அடிப்படையான விதிகள் அனைத்தும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதனால் சசிகலா கட்சியின் பொது செயலாளராக நியமித்ததை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது.
கட்சியின் அடிப்படை விதிகளின்படி கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஓட்டளித்து புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.