தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டது. பெரியார், அண்ணா உள்ளிட்ட பெரும் தலைவர்களின் பெயர்களிலான இந்த விருதுகள் இன்று சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு விழாவில் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், விருதினை வழங்கி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருக்குறளின்படி ஆட்சி செய்தார். ஜெயலலிதாவை அடியொற்றி தமிழக அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும், தமிழ் எழுத்தாளர்கள், நகைச்சுவையாகவும், நல்ல கருத்துக்களையும் எடுத்து எழுதி வருகின்றனர். இப்படி தமிழ் விருதுகள் வழங்குவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை வளர்க்க முடியும். தமிழக அரசு தமிழ் மொழிக்காக நிறைய செய்திருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
மேலும், 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் வழங்கப்பட்டன. அதன்படி, ஒவ்வொருவருக்கும் மருத்துவப்படி 100 ரூபாயும், மாத உதவித் தொகையாக 2000 ரூபாயும் கிடைக்கப்பெறும்.