451 கோடி ஆண்டுக்கு முன்பு சந்திரன் உருவானது: அப்பல்லோ விண்கல ஆய்வில் தகவல்!!

பூமியின் துணை கிரகமான சந்திரன் எப்போது தோன்றியது என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பூமி மற்றும் தியா எனப்படும் தொடக்க கால கோள்களும் ஒன்றுடன் ஒன்று அதி பயங்கரமாக மோதிக் கொண்டதில் சந்திரன் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் சந்திரன் திரவ நிலையில்தான் இருந்தது. பின்னர் அது திடநிலைக்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவின நாசா மையம் அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பியது. அப்போது அங்கிருந்து கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தன.

அவை ‘ஷிர்கான்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. அவற்றை அமெரிக்காவின் கலிபோர்னியா- லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற் கொண்டனர்.

அதன் மூலம் சந்திரன் 451 ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது முந்தைய ஆய்வின் தகவல்படி 4 கோடி முதல் 14 கோடி ஆண்டுக்கு முன்பே தோன்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.