நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 10 பேருக்கு பிணை!

ஹம்பாந்தோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 24 பேரை இந்த மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஹம்பாந்தோட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 51 இற்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.