சாலாவ ஆயுத கிடங்கு வெடிப்பு: சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி வெளியானது!

கொஸ்கம – சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.லியனவல தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சேதமடைந்த சொத்துக்களுக்கு இதுவரை ஆயிரத்து 41 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தத்திற்கு உள்ளான சிலர் இழப்பீட்டுத் தொகை போதாதென்று குறிப்பிட்டமையால் இரண்டு மூன்று தடவை மதிப்பீடுகளை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.