நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர்கள் மூவர் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் அளிப்பதற்கு வருகை தராமல் ஆணைக்குழுவை அவமதித்தார் என நாமலுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக நாமல் தயாராகவே இருந்தார் என்றும் அவரது சட்டத்தரணி இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம், இது தொடர்பில் ஆணைக்குழுவின் ஆலோசனையையும் கருத்திற் கொள்ள வேண்டும் என நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, குறித்த வழக்கு மீண்டும் இந்த மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.