உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் அண்மையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு அமைச்சர் திகாம்பரத்திற்கு சந்திரிக்கா அழைப்பு விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியை தோற்கடிக்க உதவுமாறு சந்திரிக்கா கோரியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
இதன் காரணமாக தொழிலாளர் தேசிய காங்கிரஸின் தலைவர் பழனி திகாம்பரத்துடன் சந்திரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தினை இணைத்து கூட்டணியாக போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.