கூட்டு எதிர்க்கட்சியின் தேங்காய் உடைப்பில் வீரவங்சவின் சிறைக்கதவு திறக்குமா?

கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விசேட வழிபாட்டு நிகழ்வுகள், கதிர்காமத்தில் புதன் கிழமை காலை இடம்பெறவுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை விடுதலை செய்யக் கோரியே இவ்வாறான வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த பூஜை வழிபாடு, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான,உதயசாந்த குணசேகர மற்றும் விஜித பேருகொட ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு கைது செய்யப்பட்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.