உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடு சென்றுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பியதும் வவுனியா பேரூந்து நிலையம் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வவுனியா பேரூந்து நிலையம் இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எனினும், இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களை தவிர்ந்த ஏனைய எவரும் கலந்துகொள்ளவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன், வட மாகாண போக்குவரத்து அமைச்சருக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மயூரன் இதன் காரணமாகவே, இந்த நிகழ்வில் கூட்மைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.