அரசியலில் இருந்து தாம் விரைவில் ஒய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தாம் விரைவில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளளேன். ஏனைய சில அரசியல்வாதிகளைப் போன்று அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருக்க தாம் விரும்பவில்லை.
அத்துடன், குடும்ப அரசியல் நிகழ்ச்சி நிரலற்ற ஓர் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். தனது குடும்பத்தில் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவியொன்றை வழங்கும் முயற்சியில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
எனினும், இந்த முயற்சிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதிலளிக்காது இருப்பதால் கடும் விரக்தியில் இருக்கும் அமைச்சர் அரசியலில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.