மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மதுவுக்கு அடிமையானவர் என்றும் அவரது சொந்த வீட்டை விற்கும் அளவுக்கு கடனாளி எனவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார். இவர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியை கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் திகதி புதுக்கட்சி ஒன்றையும் துவங்கி அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளார்.
தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலாவை கட்சியில் இருந்து துரத்துவதே தமது நோக்கம் என சூளுரைத்துள்ள தீபா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெலியாகியுள்ளது.
தீபாவின் தந்தை ஜெயக்குமார் சுங்குவார்சத்திரம் அருகே எச்சூரில் தலித் மக்கள் நிலங்களை ஆக்கிரமித்து இறால் பண்ணை நடத்தி வந்துள்ளார். 1994 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தலித் மக்கள் இறால் பண்ணையை சூறையாடி நிலத்தை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி தளித் மக்களின் கோபத்துக்கு உள்ளான ஜெயக்குமார் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் பேரில் உள்ள பட்டா நிலத்தை மட்டும் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள மூர்த்தி என்பவர் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.
தற்போது கடன் தொல்லை காரணமாக அந்த நிலத்தையும் தீபா குடும்பத்தினர் விற்றுவிட்டார்கள் என கூறப்படுகிறது. தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஜெயக்குமார் மகள் தீபாவின் பின்னால் அதிமுகவினரில் ஒரு குழுவினர் அணி திரள்வது வேடிக்கையாக உள்ளது என அப்பகுதி மக்கள் பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தீபா மதுவுக்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது. அதிக மது போதையில் இருச்சக்கர வாகனம் ஓட்டிய தீபா அதில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அவரை பிரபல சூர்யா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்தின்போது அவரது முன் பற்கள் 8 உடைந்திருந்தது. இதனையடுத்து உடைந்த பல்லுக்கு பதிலாக பல் கட்டிய பின்னரே வெளியே போவேன் என்று கூறியதால் 25 நாட்கள் சூர்யா மருத்துவமனையில் இருந்து கட்டின பல் உடன் வெளியே வந்துள்ளார் தீபா.
போக்குவரத்து பொலிசார் மது போதையில் வந்த தீபாவுக்கு விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்திருந்தனர். மட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக போயஸ் கார்டனுக்கு தெரிய வந்ததும், ஜெயலலிதா உத்தரவின்பேரில் வழக்கை ரத்து செய்துள்ளனர் பாண்டி பஜார் காவல் துறையினர்.
மட்டுமின்றி சூர்யா மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனை கட்டணத்தை போயஸ்கார்டனே கொடுத்ததாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி தீபா தமது வீட்டை விற்ற தகவல் போயஸ் கார்டனுக்கு தெரிய வந்ததும் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தலையிட்டு வீட்டை வாங்கியவரிடம் இருந்து மீண்டும் தீபாவுக்கே வாங்கி கொடுத்துள்ளனர். அந்த வீட்டில் தான் தீபா இன்றளவும் குடியிருந்து வருகிறார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதாலையே அவர் குடியிருந்த பகுதியில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் தீபாவை கார்டன் பக்கம் வரக்கூடாது எனக்கூறியதற்கு இதுவும் ஓர் காரணம் என கூறப்படுகிறது.