ட்ரம்ப் என்னை ஹொட்டல் அறைக்கு அழைத்தார்! உண்மைகளை போட்டு உடைத்த மொடல் அழகி!!

முன்னாள் ஹங்கேரியன் அழகியான காட்ட சர்கா, தன்னை டொனால்ட் ட்ரம்ப் ஹொட்டல் அறைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது Kata Sarka இதனை தெரிவித்தார். இது உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், தற்போது வரை இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து Kata Sarka கூறுகையில், கடந்த 2013ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் ஒரு நபரை சுற்றி பாதுகாவலர்கள் சூழ்ந்து நின்றனர்.

இந்நிலையில் அருகில் நின்ற என்னை அவர் திடீரென கையைப் பிடித்து இழுத்து, ‘ஆங்கிலத்தில் நீ யார்?’ என்று கேட்டார்.

நான் ஆச்சரியத்தில் மூழ்கிய நிலையில் எனது வாயில் இருந்து ‘ஹங்கேரி’ என்று மட்டும் தான் வந்தது.

அப்போது உடனே விஸ்டிங் கார்டை கொடுத்த அவர், அவர் தங்கி இருக்கும் ஹொட்டல் பெயரையும், அறை எண்ணையும் குறிப்பிட்டு என்னை அழைத்தார். அவர் வேறு யாரும் இல்லை ட்ரம்ப் தான் என்று கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் Kata Sarka பங்கேற்ற போது கூட ட்ரம்ப் கொடுத்ததாக கூறிய விஸ்டிங் கார்டின் புகைப்படத்தை காட்டினார்.

இருப்பினும் தற்போது வரை டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் இருந்து 2013ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அவர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படவில்லை.