டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரையடுத்து 44-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபருக்கென பிரத்யேக டுவிட்டர் கணக்கு தற்போது உள்ளது. மேலும், அமெரிக்க அதிபராக உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அதிபராக பதவியேற்ற உடன் தனது டுவிட்டர் கணக்கை மூடிவிட போவதில்லை, தொடர்ந்து கருத்துக்களை டுவிட்டர் மூலமாக தெரிவித்து வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.