சோயா பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சீர்ப்படுத்தி, ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் அற்புதமான ஒரு மிகச் சிறந்த புரோட்டீன் உணவு.
ஆனால் இந்த உணவை இயற்கையான முறையில் நாம் விளைவித்து சாப்பிட்டால் மட்டுமே இதனுடைய பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
கடைகளில் விற்கப்படும் உணவுகளில் அதிகமாக மரபணு மாற்றம் செய்யப்படும் ஒரு உணவுப் பொருளாக சோயா உள்ளது. எனவே நாம் அதை சாப்பிடும் போது, பலவிதமான பக்க விளைவு பிர்ச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.
சோயா உணவினால் ஏற்படும் பக்க விளைவுகள்
- சோயா நமது உடம்பில் இருக்கும் தைராய்டு ஹார்மோன்களின் அளவை குறைக்கச் செய்து, ஹைபோதைராய்டு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே நாம் தினமும் அதிகப்படியான சோயாவை உணவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
- உணவின் தரம், நிறம், அளவு ஆகியவற்றை கவரும் விதத்தில் கலப்படம் செய்வதில் சோயா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை நாம் உணவில் எடுத்துக் கொள்வதால், நமது உடம்பில் அளவுக்கு அதிகமான கலோரிகளை அதிகரிக்கச் செய்கிறது.
- சோயா உணவில் ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் இயற்கையாகவே உள்ளது. எனவே இதை பருவம் அடையாத பெண்கள் சாப்பிட்டால், ஏற்கனவே இயல்பாக அவர்களின் உடம்பில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கச் செய்து பிறகு மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
- மரபணுக்களை கலந்த சோயா உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் இருக்கும் ஜீன்கள் தடுமாற்றம் அடைவதோடு, ஜீரண சக்தியை குறைக்கச் செய்கிறது.