செரிமான பிரச்னையால் அவதியா? இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க…

ஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதிப்பது தான். ஆனால் இப்படி ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு நம் பாட்டிமார்களின் சில கை வைத்தியங்கள் கைக் கொடுக்கும்.

வைத்தியம் #1:

மோரில் சிறிது மிளகைப் போட்டு ஊற வைத்து, பின் அதனை உலர வைத்து, குறைவான தீயில் வறுத்து இறக்கி, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த மிளகுப் பொடியில் தேன் சேர்த்து கலந்து, காலையிலும், மாலையிலும் உட்கொள்ள, செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

வைத்தியம் #2

ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் சிறிது மிளகுத் தூள் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தாலும், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #3

ஓம நீரில் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், செரிமான பிரச்சனைகள் உடனே நீங்கும்.

வைத்தியம் #4

வாழைப்பழத்தில் சிறிது பெருங்காயத் தூளை தூவி சாப்பிட, செரிமான பிரச்சனைகள் விலகும்.

வைத்தியம் #5

மோருடன் சிறிது கறிவேப்பிலை சாறு அல்லது கறிவேப்பிலையை சேர்த்து கலந்து, குடிப்பதாலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #6

1/2 டீஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குடிப்பதால், செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, பசியின்மையும் போய்விடும்.

வைத்தியம் #7

செரிமான பிரச்சனைகள் இருக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாறு அல்லது ஆப்பள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.

வைத்தியம் #8

ஒரு டம்ளர் நீரில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, செரிமான பிரச்சனை இருக்கும் போது குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியம் #9

ஒரு டம்ளர் நீரில் புதினா சாற்றினை சேர்த்து கலந்து, 4 மணிநேரத்திற்கு ஒருமுறை குடித்து வர, செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

வைத்தியம் #10

3/4 டம்ளர் பால் அல்லது நீரை கொதிக்க வைத்து, அதில் 2-3 பற்கள் பூண்டை தட்டிப் போட்டு, பால் பாதியாக குறையும் வரை சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க, செரிமான கோளாறுகள் நீங்கும்.