சித்த ஆயுர்வேத மருந்துகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள மூலிகைச்செடி ஓமம்.
பலவித நோய்களை குணப்படுத்து ஓமத்தை பயன்படுத்துவது எப்படி?
- 1/2 ஸ்பூன் ஓமத்தை 1 லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, அதை தினமும் குடித்தால், ஆஸ்துமா நோயின் தாக்கம் நமக்கு ஏற்படாது. குடலிரைச்சல், இரைப்பு, போன்ற நோய்களுக்குன் ஓமம் தண்ணீர் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
- ஓமம், மிளகு 35 கிராம் எடுத்து நன்கு பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
- ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால், மந்தம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.
- பசியைத் தூண்டுவதுடன், நாம் சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகுதல் மற்றும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளைக்கும் தீர்வாக, ஓமத்தை கஷாயமாக்கி குடித்து வரலாம்.
- மார்ச்சளி இருந்தால், ஓமத்தின் எண்ணெயை மார்பின் மீது தடவ வேண்டும். மேலும் பல்வலி பிரச்சனைக்கும் இந்த ஓம எண்ணெயைப் பஞ்சில் நனைத்து பல் மீது வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்.
- சுறுசுறுப்பின்றி சோம்பலாய் எப்போதும் உணர்பவர்கள், சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
- தொப்பை உள்ளவர்கள் தினமும் இரவில் அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் 2 ஸ்பூன் ஓமம் பொடி ஆகிய இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறையும்.