நாட்டிற்கு புதிதாக கொண்டுவரப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட 58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது, நாட்டிற்கு சிறந்த விடயம் இல்லை, இதனால் நாட்டுக்கு பாரிய ஆபத்து என பொது மக்கள் முன்னணியின் தலைவரும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்திரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜி.எஸ்.பி பிளஸ் இணை பெற்றுக்கொள்வது என்றால் தங்கள் விதிக்கும் 58 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது. இதனையும் அரசு ஏற்றுக்கொண்டது.
ஆனால் அந்த 58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவைத்து தொடர்பிலேயே முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டினை ஆள்வது யார்? என்ற கேள்வி இங்கு நமக்கு எழுகின்றது. குறித்த விடயமானது நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றாகவே கருத முடியும் ஏன் என்றால் அந்த முறைமை கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்திலும் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறான நிபந்தனைகள் அன்றும் அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எமக்கு நாட்டின் வளர்ச்சியே முக்கியமாக இருந்தது என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.