விமலின் கைதுக்கு சூத்திரதாரி பசிலா?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கட்டளைகளை பின்பற்றாமையினாலேயே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னுடன் இணைந்து அரசியலில் செயற்படு என பசில்,விமலிடம் வலியுத்தியுள்ளார் என்றும் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பசிலின் இந்த கட்டளைக்கு உடன்படாத விமல்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையை ஏற்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி விலகிச் செல்லுமாயின் மைத்திரி தலைமையிலான கட்சியை ஏற்போம் என விமல் மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பசிலின் வழியை பின்பற்றாமையினாலேயே விமல் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள பத்திரிகை ஒன்றை மேற்கோள்காட்டி குறித்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.