மைத்திரி – மஹிந்த மந்திராலோசனை! பிரதமர் பதவி மஹிந்தவுக்கு!

உள்ளூராட்சி சபை தேர்தலை வெற்றி பெற செய்தவதற்காகவும், அரசாங்கத்தை மாற்றுவதற்காகவும், மஹிந்த மற்றும் மைத்திரி கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாவது முடிவு அமைச்சரவையில் திருத்தம். இரண்டாவது முடிவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பிரதமர் பதவி” என குறிப்பிட்டு நாடு முழுவதும் பல பிரதேசங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

உண்மை அமைப்பு என்ற அமைப்பொன்றினால் இந்த போஸ்ர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியிடம் வினவிய போது, அவ்வாறான எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் உள்ளூராட்சி தேர்தலில் உறுதியாக தோல்வியடைவோம் என்பதனை அறிந்துக் கொண்டவர்களினாலே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.