நாட்டை விட்டுச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட மற்றுமொரு இலங்கையர் கைது!

இந்தியா அரிச்சல் முணை பகுதியில் இலங்கையர் ஒருவர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த குற்றச்சாட்டு காரணமாகவே குறித்த நபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பகுதியை Rochen என்ற 27 வயதுடைய நபரே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கை பிரஜை 40 ஆயிரம் ரூபாவை செலுத்தி படகுமூலம் இந்தியா செல்ல முயற்சித்துள்ளார் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நான்கு நாட்களுக்கு முன்பாக இதே போன்று சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயற்சித்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

கஞ்சா,தங்கம் கடத்துபவர்களே இவ்வாறு அடிக்கடி படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சிக்கின்றார்கள் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.