தந்தைக்காக அரசியலை துறப்பாரா? அரசியல்வாதியாக ஏமாற்றுவாரா?

பதவியை விட்டு விலகுவதா இல்லையா என்பது தொடர்பில் இந்த மாதம் 21ஆம் திகதி தீர்மானிப்பேன் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டே தீர்மானம் முன்னெடுக்கப்படும் என விதுர விக்ரமநாயக்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நுகேகொடயில் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டு எதிர்க் கட்சியின் பேரணியில் தான் கலந்துக்கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தான் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.