எக்ஸிமோவர்களுக்கே ஐஸ் விக்கும் அரசு!

இடம் கொள்வனவு தொடர்பில் யோசனைகளை முன்வைக்க நிதியமைச்சருக்கு அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக நிலக்கொள்வனவு வரி தொடர்பாக நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

காணிகள் தொடர்பாக அமைச்சு இருக்கும் போது நிதியமைச்சர் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் இது நாட்டிற்கு துரோகமிழைக்கும் சட்டமூலம் என்பதோடு இதனை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, GSP பிளஸ் ஆனது சொக்கலேட் போன்றதாக காணப்பட்டாலும் சயனைட் கலந்த ஒன்றாக அதன் நிபந்தனைகளை அனுபவிக்கும் போது தெரியவரும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இந்த அரசாங்கமானது எக்ஸிமோவர்களுக்கே ஐஸ் விக்கும் நிலையில் செயற்பாடுகளை காண்பித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.