சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மத்தல அலுவலகத்தின் கழிப்பறைகளின் குழிகள் நிரம்பி காணப்படுவதானால் பிரதேசம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்த கட்டடம் உரிய தரத்தில் நிர்மாணிக்காமையே இந்த நிலைமைக்கு காரணம் என விமான போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் நிர்வாக அதிகாரிக்கு நெருக்கமான ஒருவரினால் இந்த கட்டடத்தின் கண்கானிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், எவ்வித திறனுமின்றி இந்த கட்டடம் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கியதோடு, அதற்கான நிறுவனங்களிடம் தரகு பணம் பெற்றுக் கொண்டு பின்னர் அவர் அந்த பணியில் இருந்து விலகி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடத்தின் பல இடங்களில் தற்போது கடுமையான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான மழை பெய்யும் போது மழை நீர் தேங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.