டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு இருநூறு மடங்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவி வரும் காலநிலையினால் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு பதிவாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை டெங்குவை ஒழிக்கும் நோக்கில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கத்தோலிக்க சமூகத்தினால் கொழும்பு மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் பின்னர் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களினதும் பங்குகளில் சிரதமானப் பணிகளை மேற்கொள்ளுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்குத் தந்தைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்தந்த பங்குகளுக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.