2015ஆம் ஆண்டு முதல் தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமியின் தாயார் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், குறித்த சிறுமி தந்தையுடனும், உறவினர்களுடனும் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சிறுமி கல்வி நடவடிக்கைகளுக்காக அண்மையில் பெண்கள் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில், தனக்கு நடந்த கொடுமைகளை விடுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விடுதி பொறுப்பாளரால் இந்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.