ரூ.5,300 கோடி சுனாமி நிதி மோசடி? சிக்குவாரா மஹிந்த..!

தகவல் அறியும் சட்டம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைமுறைக்கு வந்ததும் அது பலருக்கு சிக்கலாக அமையும் என்று தெரியவருகின்றது.

குறிப்பாக, மஹிந்த அணிக்கு அது பாரிய தலையிடியாக அமையும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் மஹிந்தவே முதல் குறியாம்.

அந்தவகையில், 2005ஆம் ஆண்டு சுனாமி நிவாரணத்துக்காக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட 12,100 கோடி ரூபாவில் இருந்து பதுக்கப்பட்ட 5,247 கோடி ரூபாவை தேடும் நடவடிக்கையை தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு ஆரம்பிக்கவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 24,200 கோடி ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் முன்வந்தன.

அதில் 12,100 கோடி ரூபாவை மாத்திரமே அப்போதைய அரசு பெற்றுக்கொண்டது. அந்தத் தொகையில் இருந்து 6,853 கோடி ரூபாவை அரசு செலவு செய்தது. மீதித் தொகையான 5,247 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

தகவல் அறியும் சட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வந்ததும் இந்தத் தொகைக்கு என்ன நடந்தது என்று தேடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிக்குவாரா மஹிந்த? பொறுத்திருந்து பார்ப்போம்.