சீன ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர்..!

சீன ஜனாதிபதி ஸீ ஸின்பிங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் அந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள சீன ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் அதனை அண்டிய முதலீட்டு வலயம் மற்றும் கொழும்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் நிதி நகரம் என்பன குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் நிறுவனங்களுடன் இணைந்து ஒரே பாதை என்ற திட்டத்தின் அடிப்படையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொருளாதார மாநாடு ஆரம்பமாக முன்னதாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.