இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள செயற்பாட்டு திட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரி நிராகரித்துள்ளார் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
பரிந்துரை செய்யப்பட்டுள்ள செயற் திட்டங்களில் இலங்கையில் அமுல்படுத்தப்பட முடியாத பரிந்துரைகளை நிராகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன்படி ஓரினச் சேர்க்iகாயளர் திருமணங்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கப் பெறுகின்றது.
எனவே, இந்த செயற் திட்ட பரிந்துரைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.