அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள வரும் 20-ம் தேதிக்குள் வெள்ளை மாளிகையை விட்டு ஒபாமா வெளியே செல்ல வேண்டும் என்ற நிலையில் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும் 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் இன்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்ற பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1385 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 212 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.