2 மாத காலமாக அநேகருக்கு தும்மலும், இருமலும், மூக்கடைப்பும், ஜலதோஷமும் என்ற பாதிப்பாகத்தான் இருக்கின்றது. சாதாரண ஜலதோஷம் அனேகமாக வைரஸ் கிருமியால் ஏற்படுவது.
* மூக்கடைப்பு
* மூக்கில் திரவம் வடிதல்
* தலைவலி
* சோர்வு
இன்னும் கொஞ்சம் தீவிரமடைந்தல் ஜுரம், இருமல் இப்படி கூடி பின் இறங்கி மறைகின்றது. சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்கும் மேல் இதன் ஆயுட் காலம் எனலாம். ஆனால் சிலருக்கு இதுவே சைனஸ் தாக்குதலாக மாறுகின்றது. பல பேர் எனக்கு சைனஸ் பிரச்சினை என சொல்வதனைக் கேட்கின்றோம்.
* மூக்கிலிருந்து தடித்த சளி வெளியேறுதல்
* கண், முகத்தின் இருபுறம் இடங்களில் வலி
* நெற்றி பகுதியில் தலைவலி
* கடுமையான மூக்கடைப்பு
* தொண்டைவழி சளி வெளியேற்றம்
* ஜுரம், இருமல்
ஆகியவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள். எதனால் இந்த சைனஸ் தொல்லை ஏற்படுகின்றது?
* ஜலதோஷம்
* அலர்ஜி
* மூக்கில் சதை
இவையெல்லாம் சைனஸ் தொல்லை ஏற்பட காரணம் ஆகின்றது. இது மிக அதிகமாக தொல்லை தரும் பொழுது எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற சோதனை முறைகளை மருத்துவர் மேற்கொள்வார். அதற்காக மருந்துகளும் அளிக்கப்படும்.
ஆவி பிடித்தல் போன்றவை சற்று நிவாரணம் தரும். மிக அதிக தாக்குதலுக்கு ஆன்டிபயாடிக்ஸ், சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் தேவைபடும்.
தூசு நிரம்பிய இடங்களை தவிர்த்தல், கைகளை சுத்தமாய் வைத்திருத்தல், ப்ளூ ஊசி வருடந்தோறும் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை சைனஸ் தவிர்ப்பு முறைகளாக உதவும்.
* உங்களுக்கு சைனஸ் பாதிப்பு என்றால் பள்ளிக்கோ, ஆபீசுக்கோ சென்றால் மற்றவர்களுக்கு பரவும் என்று பயப்படவேண்டாம். நீங்கள் தாரளமாக பள்ளி மற்றும் ஆபீஸ் செல்லலாம்.
* சைனஸ் பாதிப்பு இருக்கும் நேரத்தில் விமான பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. காது வலி போன்ற பிரச்சினைகள் பயணத்தின் போது ஏற்படலாம்.
* தலையும், முகமும் வலித்தால் மருத்துவ ஆலோசனை படி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
* அதிக திரவ உணவு எடுத்துக் கொள்ளவும். சூடான சூப், ஹெர்பல் டீ இவை பெரிதும் உதவும்.
* மது அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.
* வெந்நீர் ஒத்தடம் நல்லது.
* நீச்சல் செய்பவர்களுக்கு அதிலுள்ள குளோரின் கூட இப்பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
* மசாலா நெடி, சமையல் புகை இவையும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
* உடற்பயிற்சி செய்யும் சமயத்தில் கவனம் தேவை. தலை சுற்றல் ஏற்படலாம்.
* ஆவி பிடியுங்கள்.
* வீட்டினை சுகாதாரமாக வையுங்கள்.
* மஞ்சள், இஞ்சியினை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* வைட்டமின் சி சத்து தேவையெனில் மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.
* பால் வகை உணவுகளில் அலர்ஜி இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
* பூண்டு, முள்ளங்கி, வெங்காயம் இவற்றினை சமையலில் அதிகம் பயன்படுத்துங்கள்.
* சுடுநீரில் உப்பு சேர்த்து ‘கார்கின்’ செய்வதனை அன்றாட வழக்கமாக கொண்டு விடுங்கள்.
மனிதன் பசி என்ற ஒன்றிற்காகத்தான் படாதபாடு படுகின்றான். முறையான உணவு உண்கின்றானோ இல்லையோ முறையற்ற உணவினை முறையற்ற முறையில் உண்டு வாழ்கிறான். எனவே நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். அதற்கு சில டிப்ஸ் இதோ.
நாமே நமக்கு இருக்கும் பசி உணர்வினை முறையாய் அறிவதில்லை.
* தலை சுற்றல் போல், உடல் நடுங்கி சங்கடமான ஒரு உணர்வு அதிக நேரம் சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும்.
இந்த மாதிரி ஏற்படும் கால கட்டங்களில் கையில் கிடைத்ததை அப்படியே சாப்பிட்டு விடுவோம்.
* முறையான சாப்பாட்டு நேரத்தில் ஏற்படும் உணர்வுதான் பசி உணர்வு சாப்பிட்டவுடன் தரும் உணர்வு.
* காலை உணவு மதிய உணவு இடைவெளியில் அது போல் மாலை நேரத்தில் ஏற்படும் முழு பசியும் இல்லாத ஒருவித ‘நம நம’ எனும் உணர்வு குட்டி பசி.
* சாப்பிடும் பொழுது ஒரு நிறைவு உணர்வு ஏற்படும். இதுவே தேவையான அளவு உண்டு விட்டோம் எனும் உணர்வு.
* இந்த உணர்வுக்கு மேல் உண்ணும் உணவு சுவையாய் இருக்காது.
* ஆசை, பேராசையின் காரணமாக மேலும் உண்பது நெஞ்செரிச்சல். அஜீரண கோளாறு ஆகியவற்றினைத் தரும்.
* உணவு உண்டு 4&5 மணி நேரங்களுக்குப் பிறகு வயிறு காலியாய் இருப்பதை போல் தோன்றும் உணர்வே உணவு வேண்டும் என்று கூறும் உணர்வு. இவ்வாறு நேரப்படி முறையாய் உண்டால் உடல் நலம் சீராக இருக்கும்.
* இரு வேளை உணவுக்கு நடுவே ஒரு சின்ன பசி ஏற்படுவது சகஜமே. சூப், மோர், பழம் போன்ற ஏதாவது ஒன்றினை எடுத்துக் கொள்வது நல்லது.
* காலை உணவினை எக்காரணம் கொண்டும் தவிர்க்காமல் இருப்பது நல்லது.
* மதிய இரவு உணவுக்கு சிறிது நேரம் முன்பாக சூப், சாலெட் எடுத்துக் கொள்ளலாம்.
* உலர்ந்த பழங்கள் அதிக கலோரி சத்து என்று நினைத்தால் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
* எப்பொழுதும் உணவில் புரத சத்து உள்ளதா என்பதனை அறியுங்கள்.
* நார்சத்து மிகுந்த உணவுகளை பிரதான உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.