கொக்காகோலா மத்திய நிலையமாக மாறப்போகும் இலங்கை!

கொக்காகோலா உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக கொக்காகோலா உற்பத்தி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

கொழும்பில் அண்மையில் கொக்காகோலா நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொக்காகோலாவிற்கு கூடுதல் கேள்வி நிலவும் இந்தியாவுக்கு கூடுதலான உற்பத்திகளை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இதனூடாக கிடைக்கும் என்று நிதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கைக்கு கூடுதலான அன்னியச் செலாவணியை ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.