அரசாங்கம் சரிய ஆரம்பித்துள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன் அறிகுறிகள் தற்பொழுது மக்களுக்கு வெளிப்பட ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விஜேராம பிரதேசத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்துடன் இருந்த ரத்ன தேரர் தீர்மானம் எடுத்துள்ளார். பிரியங்கர ஜயரத்ன அமைச்சர் விலகியுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி கூட்டு எதிர்க் கட்சியின் மேடையில் ஏறுவதற்கு இன்னும் சிலர் உள்ளனர். மேலும் அமைச்சுப் பதவிகளை விட்டுவிட பலர் உள்ளனர்.
மரத்தைப் பிடுங்கி எடுப்பதற்கு முன்னர், மரம் வேர்விட்டுள்ள மண்ணை மெதுவாக்க வேண்டும். இதுதான் தற்பொழுது நடைபெற்று வருகின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.