சிறையில் காந்தியை பின்பற்றும் விமல்!

வாகன துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச புத்கதம் ஒன்றை எழுதி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாள்தோறும் நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து நூல் எழுதும் பணிகளில் விமல் வீரவன்ச ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

நேற்றைய தினம், பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன, விமல் வீரவன்சவை பார்வையிட சிறைக்குச் சென்றிருந்தார்.

இதன் போது கிடைத்துள்ள ஓய்வில் தாம் நூல் எழுதி வருவதாகவும் இதுவரையில் 24 பக்கங்கள் எழுதி முடித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையானதும் தாம் இந்த நூலை அச்சிட்டு வெளியிட தீர்மானித்துள்ளதாக வீரவன்ச கூறியுள்ளார்.

காந்தியும் இவ்வாறு செயற்பட்டார் என இலங்கை சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.